என்னோட சொந்த ஊர் சிவகாசி. அங்க நான் ஒரு strictaana ஸ்கூல்ல படிச்சேன். ரொம்ப படிப்புல focus பன்ற ஸ்கூல். ரொம்ப rules இருக்கும். Classல ரொம்ப அமைதியா இருக்கனும். Friends கூட சேர்ந்து படிக்க கூட கூடாது. அப்டி இப்டினு எல்லா அர்த்தமே இல்லாத rulesum இருக்கும். But எனக்கு எங்க school ரொம்ப பிடிக்கும் because நா ஸ்கூல்ல நல்ல படிக்கிற பொன்னு. So எனக்கு ஏதும் பெருசா தெரில . And நா LKG ல இருந்து அதே school ல படிச்ச நால எனக்கு ரொம்ப பிடிக்கும்
10த் ல நா examகு ரொம்ப stress ஆனேன். அது பாத்து எங்க அம்மா நம்ம வேற school மாத்தலாம் சொன்னாங்க . எங்க ஊர்லே இனொரு ஸ்கூல் என்னோட Cousins லாம் படிச்சாங்க. அந்த ஸ்கூல் இவ்ளோ strict கிடையாது. Jolly ஆஹ் irkum . But நா கேக்கவே இல்ல. நா என்ன ஆனாலும் என் ஸ்கூல் ல தான் படிப்பேன்னு சொல்லிட்டேன்.
12த் ஸ்டாண்டர்ட் அப்போ ஜூலைல எங்க அப்பா இறந்திட்டாங்க . அப்பா ரொம்ப sweet அண்ட் romba close – so எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. என்னோட teachers & friends funeral கு vandhaanga . 5 days leave கு அப்பறோம் நா மறுபடி ஸ்கூல்கு போகவேண்டிருந்தது.
நா போன உடனே யாரும் எதும் கேக்கல . எப்பவும் போல normal ஆஹ் behave பண்ணாங்க. Maybe எதாச்சும் கேட்டா எனக்கு hurt aagum னு என் friends நினைச்சிருக்கலாம்.
But என்னோட teachers உம் எதும் கேக்கல . அண்ட் எனக்கு அது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு . எதுவும் நடக்காத மாறி Normal ஆஹ் கிளாஸ் attend பண்றது. Testsku படிக்கிறது. எல்லாமே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
Periods first ஆனா போ கூட என்னோட favourite miss என்னைய தனியா கூப்பிட்டு Pad எப்போவும் bag ல வெச்சுக்கணும் அப்டி supportive ஆஹ் பேசினாங்க . But அப்பா இறந்ததுக்கு யாரும் எதுவும் சொல்லல. Tests பத்தியே எப்போவும் போல பேசிட்டு இருந்தாங்க .
ஒரு நாள் ரெண்டு டீச்சர்ஸ் நா test ல கம்மி mark vaangirken இன்னும் improve பண்ணனும்னு அடுத்தடுத்த period ல சொன்னாங்க . அது ஒன்னும் ரொம்ப கம்மியான மார்க் ஏ கிடையாது . And obviously நா முன்ன மாறி படிக்க முடியாது because 2 months கு முன்னாடி தான் அப்பா இறந்திருக்காங்க.
I think எனக்கு frustration இருந்துட்டே தான் இருந்திருக்கு but இப்டி என் teachers கேட்ட உடனே எனக்கு ஒரு breaking point மாரி ஆயிருச்சு . அடுத்த நாள்ல இருந்து நா ஸ்கூலுக்கே போகல.
அம்மா and family members, friends, teachers எல்லாம் சொல்லி பாத்தாங்க. But எனக்கு ஸ்கூலுக்கு போக முடில. அம்மாவும் புரிஞ்சிக்கிட்டாங்க எனக்கு கஷ்டமா இருக்கு Depression மாறினு . So என்னைய force பன்னல. நா அந்த year board exam எழுதல.
நா என்ன பண்ணேன் வீட்ல 6 monthsah அப்டி எனக்கு நியாபகம் இல்ல. But மோசட் ஆஹ் books படிப்பேன், கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவேன் இல்லனா தூங்கிருவேன்.
Aprilku அப்பறோம் ஒரு change of place இருந்தா நல்லா இருக்கும்னு எங்க அம்மா கொஞ்ச நாள் என்னைய எங்க பாட்டி வீடு Coimbatore கு கூப்பிட்டு வந்தாங்க . கொஞ்ச நாள் கழிச்சு என handwriting கிளாஸ் கூப்பிட்டு போனாங்க . அவுங்களும் என் கூட சேந்து class கு வந்தாங்க . சும்மா வீட்லே இருக்கிறதிக்கு பதிலா அது ஒரு distraction ஆ இருந்துச்சு .
அப்ப தற்செயலா ஒரு Poster பாத்தேன். பக்கத்துல business maths and Accounts tution கிளாஸ் எடுக்கிறாங்க அப்டினு. Maybe commerce group ku வீட்லே இருந்து try பண்லாம்னு எனக்கு ஒரு idea இருந்திச்சு . இந்த year 12த் வீட்லே இருந்து படிச்சு complete பண்லாம்னு. Maths என்னோட favourite subject. So நா அந்த tuition சேந்தேன் .
அங்க first day போனானே பாத்தேன் அந்த classல என்ன தவிர ஒரு பொன்னு தான். அவ பேர் puja . அவ கிட்ட பேசினேன். எங்க அப்பா இறந்துட்டாங்க அப்டி open ஆஹ் சொல்ல எனக்கு அப்ப வராது. but அவள பாத்தோனே நா சொல்லிட்டேன். And அவளும் consoling ஆஹ் எனக்கு பேசுனா.
Tuition sir உம் ரொம்ப strict கிடையாது. நல்ல சொல்லி தருவார். So நா regular ஆஹ் tuition போக மாட்டேன் . ஒரு நாள் நா Puja கிட்ட பேசும் போது அவா சொன்னா இதுவு நல்லது தான் நா school கு போகாம வீட்ல இருந்து படிக்கிறது. school லாம் வேஸ்ட். அவுங்க school ல ஒன்னு சொல்லி தர மாட்டாங்க னு. அது எனக்கு ஆச்சிரியம் இருந்துச்சு because எல்லாரும் என்ன school போ சொன்னாங்க. But பூஜை போகாத வேஸ்ட்னு சொன்னா.
So நா அவ ஸ்கூல் பத்தி நிறைய கேட்டேன். எனக்கு தெரிய வந்திச்சு அவளோட school strictஏ கிடையாதுனு. Studies ஓரளவுக்கு focus பன்வாங்க but ரொம்ப pressure கிடையாதுனு. So எனக்கு அந்த school போனும்னு ஆச வந்திருச்சு and நானும் சேர்ந்தேன்.
ஜாலி ஆஹ் இருந்துச்சு ஸ்கூல். நா இந்த மாறி பாத்ததே இல்ல. Principal early ஆஹ் 12த்கு school start பன்னலாம் அப்டி சொன்னாங்க நா அத first oppose பன்றது எங்க teachers ஆஹ் தான் இருக்கும். Class ல எல்லா டீச்செர்ஸ் உம் jolly ஆஹ் பேசுவாங்க students கிட்ட. நா school late ஆஹ் சேந்தனால and நா depression ல இருந்த நால எனக்கு extra support classes குடுத்தாங்க நா கேக்காமலே.
And நா leave லாம் போட்டா அது ரொம்ப issue ஆஹ் consider பண்ண மாட்டாங்க. Encourage பண்வாங்க school வரதுக்கு and நா நல்லா படிக்கிறேன் சொல்வாங்க.
And எனக்கு best friends உம் கிடைச்சாங்க அந்த ஸ்கூல் ல இருந்து. இப்போ வரைக்கும் touch ல இருக்கோம். Puja , Ramya, pragya, எல்லாரும் நா லீவு போட்டா வீட்டிற்கு வந்து என்ன console பன்வாங்க. இல்ல நா call பன்னி கவலப்படாத சொல்வாங்க.
And நா அந்த year 2012 ல board எக்ஸாம் எழுதி ஸ்கூல் முடிச்சேன்.
இது மூலமா நா என் சிவகாசி ஸ்கூல் தப்பு அப்டி சொல்ல வர்ல – because என்னோட favourite டீச்சர் அந்த ஸ்கூல் தான். அவுங்க நா ஸ்கூல் quit பன்னி depressionல இருக்கும் போது வீட்டிற்கு வந்து என அடுத்த நாள் scooter ல school கு கூப்பிட்டு போறேன் அந்த அளவுக்கு என console பன்னாங்க. And எனக்கு நல்ல maths and reading வருது na அதுக்கு அந்த school தான் reason. and இந்த மாறி events ல confident ஆஹ் participate பன்ரதுற்கும் அந்த school தான் reason.
On the other hand, நா coimbatore school தான் பெஸ்ட் நும் சொல்ல விரும்பல. because எனக்கு தெரிஞ்சே சில பேர்க்கு அந்த ஸ்கூல் ரொம்ப மோசமான experience ஆஹ் இருந்திருக்கு.
நா ஜஸ்ட் என் experiene share பன்றேன். And எனக்கு இது மூலமா main ஆஹ் கத்துகிட்ட lesson, school ஓர் college ஓர் workplace அவுங்க evlo நல்ல results achieve பன்றாங்ககிறது முக்கியம் இல்ல. அவுங்க machine மாறி treat பன்னாம மனிதன மனிதனா treat பன்றது தான் முக்கியம் அப்டினு.
நா Next year ஒரு NGO start பன்னலாம் ங்கிற முடிவு ல இருக்கேன். அந்த workplace எல்லாரையும் மனிதன் ஆஹ் treat பன்னனும் அப்படிங்கிறது என் விருப்பம்.